Aug 14

முல்லைத்தீவு மீனவ பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி விசேட அவதானம்


ஜனாதிபதி தமது யாழ்ப்பாண விஜயத்தின் போது, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களது பிரச்சினை தொடர்பில் விசேட அவதானம் செலுத்த இணங்கியுள்ளார்.

முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களது 8 வாடிகளுக்கு தீவைக்கப்பட்ட நிலையில், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் இன்றையதினம் அமைச்சர் மனோ கணேசனினால், அமைச்சரவையின் அவதானத்துக்கு கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி இந்த உறுமொழியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.