Aug 14

இங்கிலாந்தில் வீதி விபத்து! -12 பேர் படுகாயம்!

இங்கிலாந்து M25 நெடுஞ்சாலையில் பேருந்தொன்று விபத்திற்குள்ளானதில் ஏழு சிறுவர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தென்கிழக்கு இங்கிலாந்தின் கென்ட் (Kent) M25 நெடுஞ்சாலையில் குறித்த பேருந்து வளைவில் திருப்பும் சந்தர்ப்பத்தில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 12 பேரில் மூவரின் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக வைத்திய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தினைத் தொடர்ந்து குறித்த நெடுஞ்சாலை அப்பகுதி பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளது. இதன்போது உண்டான வாகன நெரிசலில் குழந்தையொன்றும் பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.