Aug 14

மிசிசாகா துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை!

மிசிசாகா ஸ்ட்ரிப் கிளிப் பகுதியில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tomken வீதி மற்றும் Derry கிழக்கு வீதி பகுதியில், அதிகாலை 2:30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதியில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், 6 துப்பாக்கிச் சன்னங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் எவருக்கும் உயிர் ஆபத்து ஏதுமில்லை என தெரிவித்த பீல் பிராந்திய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.