Aug 14

கிண்ணியா -தம்பலகாமம் விபத்தில் ஒருவர் பலி

கிண்ணியா -தம்பலகாமம் தெலுங்குநகர் உள் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தம்பலகாமம் தெலுங்குநகர் உள் வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே விபத்தில் சிக்கியுள்ளார். அவர் படுகாயமடைந்த நிலையில் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்ட நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் தம்பலகாமம், தெலுங்குநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஸா ஐங்கரன் (41வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.