Aug 14

புகை­யி­ரத தொழிற்­சங்க ஊழி­யர்­களின் நஷ்­டத்தை மங்­கள சம­ர­வீ­ரவி­ட­மி­ருந்தே பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். !!!!!

புகை­யி­ரத தொழிற்­சங்க ஊழி­யர்­களின் பணி­ப்ப­கிஷ்­க­ரிப்பால் அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டி­ருக்கும் நஷ்­டத்தை அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவி­ட­மி­ருந்தே பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். தொழிற்­சங்­கங்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்த தீர்­மா­னத்தை அவர் மாற்­றி­ய­மைத்­த­தா­லேயே இந்­த­ நிலை ஏற்­பட்­டது  என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.


சோஷ­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

புகை­யி­ரத ஊழி­யர்கள் கடந்த 5 தினங்­க­ளாக மேற்­கொண்ட பணி­ப் ப­கிஷ்­க­ரிப்பு போராட்­டத்தால் பொது­மக்கள் கடும் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு ஆளா­கி­யி­ருந்­தனர். அதே­போன்று உயர்­தர பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வர்­களும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்­க­ளுக்கு ஏற்­பட்ட பாதிப்­புக்கு நஷ்­ட ஈடு வழங்­கு­வது யார்? அத்­துடன் பணிப் பகிஷ்­க­ரிப்பு கார­ண­மாக அர­சாங்­கத்­துக்கு 70 மில்­லியன் ரூபா நஷ்டம் ஏற்­பட்­டுள்­ள­தாக போக்­கு­வ­ரத்து அமைச்சு அறி­வித்­துள்­ளது.

மேலும் பணி­ப் ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டி­ருந்த தொழிற்­சங்­கங்­க­ளுடன் ஜனா­தி­பதி பேச்­சு­வார்த்தை நடத்தி அவர்­க­ளுக்கு முன்­கூட்­டியே அறி­விக்­கப்­பட்­டதன் பிர­காரம் சம்­பள முரண்­பாட்டைத் தீர்க்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாகத் தெரி­வித்த பின்னர் அவர்கள் பணி­ப் ப­கிஷ்­க­ரிப்பை கைவிடத் தீர்­மா­னித்­தனர். 

ஆனால் இந்த நட­வ­டிக்­கையை அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆரம்­பத்­திலே மேற்­கொண்­டி­ருந்தால் இந்­த­ளவு பாதிப்பு ஏற்­பட்­டிருக்­காது. 

அத்­துடன் தொழிற்­சங்­கங்கள் பணி பகிஷ்­க­ரிப்பை கைவிட்டு வந்­தால் ­மாத்­தி­ரமே பேச்­சு­வார்த்­தைக்கு தயார் என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார். அதனால் புகை­யிர திணைக்­க­ளத்­துக்கு ஏற்­பட்­டி­ருக்கும் நஷ்­டத்தை அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­க­ வேண்டும். புகை­யி­ரத தொழிற்­சங்க ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக தெரி­வித்­தி­ருந்த தீர்­மா­னத்தை மங்­கள சம­ர­வீர மாற்­றி­ய­மைத்­துள்ளார். அத­னால்தான் அவர்கள் திடீர் பணி­ப் ப­கிஷ்­க­ரிப்­புக்குச் சென்­றார்கள் என்றார்.