Aug 14

காட்டுத்தீயினைக் கட்டுப்படுத்த மேலும் நூறு மில்லியன் டொலர்கள் நிதி

ஒன்ராறியோ மாகாண அரசாங்கம், காட்டுத்தீயினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, மேலும் நூறு மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

காட்டுத்தீக்கு எதிராக போராடுவதற்காக ஏற்கனவே 70 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நூறு மில்லியன் டொலர்களை வழங்க, டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசாங்கம் முன்வந்துள்ளது.

அண்மைய தகவலின் படி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் 476 இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை காலப்பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,565 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதனால் 1,180 சதுர கிலோமீடடர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.