Aug 14

'ஒரு தேசம்; ஒரு தேர்தல்' 2019-ல் 11 மாநிலங்களில் அமல்படுத்த திட்டம்

தேர்தல் செலவினங்களை குறைக்கவும், நலத்திட்டப் பணிகள் முடங்காமல் இருக்கவும், 'ஒரு தேசம்; ஒரு தேர்தல்' என்ற நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.

இதனை பிரதமர் மோடியும் அமல்படுத்திட முயற்சித்துவருகிறார்.இந்நிலையில் 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலுடன் சேர்த்து 11 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்திட பா.ஜ. திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இந்தாண்டு இறுதியில் சட்டசபை பதவி காலம் நிறைவடை உள்ள சில மாநிலங்களுடன், ஜனவரியில் சட்டசபை பதவி காலம் நிறைவடயுள்ள சில மாநிலங்கள் உள்பட 11 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களை பார்லி.பொதுத்தேர்தலுடன் சேர்த்து நடத்திய பா.ஜ. திட்டமிட்டு வருவதாகவும் அதற்கான பணிகளின் தீவிரம் காட்டி வருவதாக தகவலறிந்தவட்டாரங்கள் கூறுகின்றன.