Aug 13

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் தொழிற்சாலை சுற்றிவளைப்பு


தடை செய்யப்பட்ட பொலித்தீனை பாரியளவில் உற்பத்தி செய்து வந்த தொழிற்சாலையொன்று கம்பஹா - மீரிகம பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த தொழிற்சாலை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் போது சந்தைக்கு அனுப்பப்படவிருந்த சுமார் 10 இலட்சம் பெறுமதியான தடை செய்யப்பட்ட பொலித்தீன் தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வித அனுமதி பத்திரங்களும் இன்றி நீண்ட காலமாக இந்த பொலித்தீன் உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.