Aug 13

மிருக வேட்டையில் ஈடுபட்டிருந்த நபருக்கு நேர்ந்த கதி

மதுனாகல சரணாலயத்தில் மிருக வேட்டையில் ஈடுபட்டிருந்த நபரொருவர் துப்பாக்கியொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது , துப்பாக்கியுடன் இருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன் , அவருடன் இருந்த மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.