Aug 13

இந்தியாவின் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் பொலிஸார்!!!!

இந்தியாவின் சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் தமிழகத்துக்குள் ஊடுருவவுள்ளதாக மத்திய உளவுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ள தகவலையடுத்து இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்திய நாட்டின் 72வது சுதந்திர தினவிழா எதிர் வரும் 15ம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சீர்குலைக்கும் வகையில் தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலையடுத்து தலைநகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் மெட்டல் டிடைக்டர் கருவிகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாம்பன் பாலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களையும் முழு பரிசோதனைக்குட்படுத்திய பின்னே அனுமதிகின்றனர். அதேபோல் இராமேஸ்வரம் தீவுப்பகுதியும் பாதுகாப்பு வலையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று காலையில் இருந்து மத்திய இருப்பு பாதை பொலிஸார் மற்றும் பட்டாளியன் படை பொலிஸார் ஆயுதம் ஏந்தி தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாம்பன் ரயில் பாலம்,பேருந்து நிலையம், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பொலிஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.