Mar 14

ஆமைக்கு சத்திர சிகிச்சை: வயிற்றிலிருந்து நாணயங்கள் மீட்பு

அதிர்ஷ்டம் என நம்பி மக்கள் தூக்கி எறிந்த நாணயங்களை விழுங்கிய பச்சை கடல் ஆமைக்கு அறுவை சிகிச்சை செய்த கால்நடை மருத்துவர்கள், தொள்ளாயிரத்திற்கும் அதிகமான நாணயங்களை அதன் வயிற்றிலிருந்து அகற்றியுள்ளனர். 

இந்தச் சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றிருக்கின்றது.

சில்லறை நாணயங்களை விழுங்குவதில் விருப்பம் கொண்டிருந்ததால் Bank (வங்கி) என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டிருந்த அந்த பச்சைக்கடல் ஆமை, தற்போது பேங்காக்கின் கிழக்கு பகுதியில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த நாணயங்களின் எடை மிக அதிகமாக இருந்ததால் Bank இன் உட்புற ஓட்டில் விரிசல் விழுந்து, நீச்சல் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆமைகளுக்கு நாணயங்களை எறிந்தால் வாழ்நாள் அதிகரிக்கும் என்று தாய்லாந்து மக்கள் நம்புகின்றனர்.

ஆனால் Bank பரிசோதனை செய்யப்பட்டபோது, மிகவும் சீற்றத்துடன் இருந்ததாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட தலைமை மருத்துவர் கூறினார்.

ஆமையைக் காப்பாற்றுவதற்காக 7 மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற்றது இதுவே முதல் தடவை.

இதற்கான செலவிற்காக பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளது.