Jun 05

லண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளனர்.

லண்டன் நகரின் மத்திய பகுதியில் உள்ள பாலம், பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் ஆகிய இடங்களில் சனிக்கிழமை இரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கத்தியால் குத்தியும், வேனை விட்டு மோதியும், துப்பாக்கியால் சுட்டும் பல்வேறு விதங்களில் தாக்குதல் நடத்தினர்.

இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 48 பேர் காயமடைந்தனர்.அந்நாட்டில் கடந்த மூன்று மாதங்களில் நடந்துள்ள மூன்றாவது தீவிரவாதத் தாக்குதல் இதுவாகும். இதனால், அந்நாடு முழுவதும் பதற்றநிலை ஏற்பட்டு பாதுகாப்பு பலம்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.