Aug 13

ஆறு வற்றியதால் ஜேர்மனியின் வரலாற்றுச் சான்று வெளிப்பட்டது!

ஜேர்மனி வழியாக பயணிக்கும் ரெயின் ஆற்றில், 123 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய ஓடமொன்று வெளிப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் ஊற்றெடுத்து ஜேர்மனி வழியாக பயணிக்கும் ரெயின் ஆறானது, தற்போது நீடிக்கும் அசாதாரண கோடைக்கால வெப்பத்தினால் சடுதியாக வற்றியுள்ளது.

இந்நிலையில், கடந்த 1895ஆம் ஆண்டு பனிக்காலப் பகுதியில் நெதர்லாந்து எல்லையில் ஆற்றுக்குள் சரிந்து பனிப் பாறைகள் விழுந்த அனர்த்தத்தில் காணாமல் போன ஒடம் வெளிப்பட்டுள்ளது. மரப்பலகையினால் உருவாக்கப்பட்ட  குறித்த ஓடம் ஆற்றில் மூழ்கி 16 பேர் உயிரிழந்ததாக வோல்ட் என்னும் உள்நாட்டுப் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

குறித்த செய்திக்கு வரலாற்று ஆதாரமாக குறித்த மர ஓடம் தற்போது வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச் சான்றாக கருதப்படும் இந்த ஓடத்தினைப் பார்வையிட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறித்த ஆற்றங்கரைக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.