Aug 13

ஐம்பது ஆடுகளைத் தின்று ஏப்பமிட்ட கட்டாக்காலி நாய்கள்!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்கட்டு என்ற பகுதியில் இன்று காலை கட்டாக்காலி நாய்கள் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஆடுகளை கடித்துத் தின்றுள்ளன.


குறித்த ஆடுகளின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவுக்கு மேல் வரும் என கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேபோன்று கடந்த காலங்களில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆடுகளை இந்த கட்டாக்காலி நாய்கள் கொன்று தின்றுள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் மற்றும் கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கால்நடை வளர்ப்பவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.