Aug 13

ஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை!…. ஜெயராமசர்மா … மெல்பேண்

சங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் 

கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு முன்பாக இருக்கலாம் என்று தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதியமான் என்னும் அரசனுடன் ஒளவை 

என்னும் பெரும் புலவர் தொடர்பு உயர்வாகக் காட்டப்படுகிறது. அந்த அதிய மான் என்னும் சங்ககால அரசன் கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்திருப்பதாய் ஆராய்வாளர்கள் கருத்து நிலவுகிறது. இந்த அதியமான் ஒளவையார் மீது மிகுந்த மரியாதையினை வைத்திருந்திருக்கிறான். அவரின் தமிழ்ப் புலமையின் பால் ஆராக்காதல்கொண்டவனாகவும்இருந்திருக்கிறான்.

 அக்காலத்தில் வாழ்ந்த ஒளவையார் யாருக்கும் அஞ்சாத பெண்மணியாகவும் நேர்மையின் பிறப்பிடமாகவும், தமிழில் மிகவும் புலமையாளராகவும், விளங்கி இருக்கிறார்.

   அரசசபைக்கு ஒளவையார் வருவதையும், அவரின் வாயினால் வாழ்த்துக் கேட்பதையும், அவரின் தமிழைப் பருகிக்கொண்டே இருப்பதையும், அரசன் ஆகிய அதியமான் பெரிதும் விரும்பியவனாகவே வாழ்ந்திருக்கிறான். அதிய மானுக்கு -‘ உண்டால் சாகமலே இருக்கும் அபூர்வ சக்திமிக்க நெல்லிக்கனி

ஒன்று ‘ – ஒருவரால் கொடுக்கப்படுகிறது. அந்தவேளை அரசனின் அவைக்கு

ஒளைவாயாரும் வருகிறார். தனக்குக் கிடைத்த அபூர்வ நெல்லிக்கனியினை ஒளவையிடம் கொடுத்து ‘ அதனை உண்ணும் வண்ணம் அரசன் அதியமான் 

விநயமாகக் கேட்கின்றான்.’ அபூர்வமான கனி ! சாகாவரமாய் அமைந்த கனி !

தனக்குக் கிடைத்துவிட்டது என்று ஒளவையார் அகமகிழவில்லை. அக்கனி

தனக்கு வரவேண்டும் என்று ஆசைப்படவும் இல்லை. 

   ” மன்னா உனது பெருங்குணத்தையும் கொடைத்திறத்தையும் மெச்சு கிறேன்.ஆனால் இக்கனி எனக்கு ஏற்றதன்று. நாட்டை ஆளும் உனக்குத்தான் 

மிகவும் பொருத்தமானது. உனது ஆரோக்கியமும், உனது நலமும்தான் 

நாட்டுக்கும்  ,  மக்களுக்கும், ஆட்சிக்கும் இன்றியமையாததாகும். ஆதலால்

நீதான் இக்கனியினை உண்டு தீர்க்காயுளடன் இருக்கவேண்டும். நானோ

பாடித்திரியும் ஒரு பரதேசி. குடும்பமே இல்லாதவள். நான் எப்படியும் வாழ்ந்து விட்டுப் போகலாம். நீண்டநாள் நான் உயிர்வாவதால் யாருக்கு என்ன பயன் ” 

என்று ஓளைவயார் கனியினைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். 

  ” தாயே தமிழ் பெருமாட்டி … நீங்கள் கூறியது அத்தனையும் சரிதான் . ஆனால் உங்களைப் போன்ற அறிவில் முதிர்ந்த ஆன்றோர்கள் நீண்டநாள் வாழ்வதால் என்னைப்போன்ற எத்தனையோ மன்னர்களுக்கு .. அறிவுரையும் 

வழிகாட்டலும் தொடர்ந்து கிடைக்கும் அல்லவா ? கொடுங்கோல் வழி  நடக்காமல் செங்கோலைத் திறம்பட வைப்பதற்கு நான் மட்டும் சாகாமல் நீண்டநாள் வாழ்வதைவிட நீங்கள் வாழ்தலே மிகவும் பொருத்தமானது. 

அம்மையே அருள்கூர்ந்து இக்கனியை ஏற்றுக் கொள்ளுங்கள் ” என்று

நாட்டின் மன்னன் வேண்டி நின்றான்.

 மன்னனின் அன்பின் நிமித்தம் தட்டிக்கழிக்க முடியாமல் ஒருவாறு ஒளைவயும் அக்கனியை பெற்றுக் கொண்டு நீண்டநாள் உயிர்வாழ்ந்தார் என்பதை அறிகின்றோம்.

   இங்கே யாவருக்கும் மிகவும் அவசியமான படிப்பினை ஒன்று காட்டப் படுகிறது. சாவா நிலையினைத் தரும் கனியை யாராவது மற்றவர்களுக்கு

மனவிருப்பத்துடன் கொடுப்பார்களா ? அப்படிக் கொடுத்தாலும் பெற இருப்ப வர் – அதனை வேண்டாம் என்றும் சொல்லுவார்களா ? இன்றைய ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்கள் அனைவருமே இந்த நிகழ்வை தமது வாழ்வில்

எப்போதாவது கடைப்பிடிப்பார்களா? மற்றவர்களுக்கு நல்ல விஷயங்கள் கிடைக்குதென்றால் .. அதனை எப்படியாவது தட்டிப் பறித்துத் தமக்கும் தமது குடும்பத்துக்கும் சொந்தமாக்குவதில் முனைவார்களே அன்றி – அதில் பொது நலத்தை நினைவிலும் கொள்ளார். கனவிலும் எண்ணார். 

   சங்ககாலம்தான் தமிழரின் பொற்காலம்! சங்ககால இலக்கியங்கள்தான் 

தமிழர்களின் சொத்து!சங்கப் புலவர்கள்தான் தமிழ் படைப்பாளர்களுக்கே

எடுத்துக்காட்டு! சங்ககால அரசர்கள் ஆட்சியினை பெருமைமிக்க ஆட்சி என்றெல்லாம் கூட்டம் போட்டுப் பேசுகிறோம்! நூல்கள் எழுதியெல்லாம் குவிக்கின்றோம் ! ஆனால் …… இங்கு வரும் அரசன் அதியமானும் அவனின் மரியாதைக்குரிய ஒளவையாரும் ஏன் எமது சிந்தனையில் நிற்கிறார்கள் இல்லை ? அவர்கள் இருவருது நயத்தகு நாகரிகமும், உயரிய பண்பாடும் 

ஏன் எம்மிடத்தில் வராமல் ஒதுங்கி நிற்கிறது ? பழைய பஞ்சாங்கம் என்று மட்டும் வாய்கூசாமல் சொல்லிவிடுவோம் ! ஆனால் அந்தப் பழமையில் புதைந்திருக்கும் அரிய பெரிய வாழ்வியல் முறையினை ஏன் தான் புறந்தள்ளி விடுகிறமோ தெரியவில்லை !

பழைமை என்பதில் பல புதுமைகளும் இருக்கின் றன! பழமை என்பதில் பல வாழும் வாழ்க்கை முறைகளும் பொதிந்து கிடக்கின்றன! இவையெல்லாம் ஓளைவையென்னும் எங்கள் தமிழ் மூதாட்டி வரலாற்றின் வழியில் நாம் கண்டுகொள்ள முடியும். இன்னும் என்னதான் வருகிறது என்பதையும் காத்திருந்து பார்ப்போம் !