Aug 13

குளியாப்பிடிய பிரதேச சபையின் மூலம் அனைத்துக் கிராமாங்களுக்குமா நீர் வடிகான் திட்டம்..

குளியாப்பிடிய பிரதேசசபை மூலம் குளியாப்பிடிய பிரதேசசபைக்கு உட்பட்ட 20 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களின் வடிகான்களுக்கான நீர் வடிகான் (போக்கு குளாய்) பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு நேற்று (12) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீரின் ஏற்ப்பாட்டில் மகாணசபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளரும் சதொச பிரதித்தலைவருமான என்.எம்.நஸீர் (MA) தலைமையில் நடைபெற்றது.

உப தவிசாளர் எம்.சி.இர்பான் அவர்களின் முயற்சியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசசபை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஊர் மக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது ஒவ்வொறு கிராமங்களுக்குமான காசோலைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டது மேலும் நீர் வடிகான் (போக்கு குளாய்) தேவைப்பாடுடையவர்கள் குளியாப்பிடிய பிரதேச சபை உப தவிசாளர் எம்.சி. இர்பான் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.