Jun 05

பின்னி பெடல் எடுத்தார் யுவராஜ்: வேடிக்கை பார்த்த கோலி வியப்பு!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங்கில் பேட்டிங்கை இந்திய கேப்டன் விராத் கோலி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் ஜூன் 1 முதல் 18 வரை நடக்கிறது. இத்தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. பிர்மிங்ஹாமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தைப் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களுடன் நடிகர் தனுஷ் உள்ளிட்ட சினிமா பிரலங்களும் கண்டுகளித்தனர்.

இப்போட்டியிங் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 319 ரன்கள் குவித்தது. பின் டக்வொர்த் லீவிஸ் முறையில் 41 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 164 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து பரிதாபமாக தோற்றது. 124 ரன்களில் வெற்றி பெற்ற இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் அணியை மண்ணைக் கவ்வ வைத்தது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார் யுவராஜ் சிங். ஆட்டநாயகன் விருது பெற்றவருடன் களத்தில் இணைந்து பேட்டிங் செய்த கேப்டன் விராட் கோலி யுவராஜின் பேட்டிங்தான் பாகிஸ்தான் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான முக்கியமான வித்தியாசமாக அமைந்ததாக கூறியுள்ளார்.