Aug 13

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை ரஸ்யாவும் விஸ்தரிக்கின்றது

இலங்கை படையினருக்கு பயிற்சிகளை வழங்கவுள்ள ரஸ்யா இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஸ்யாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை இதற்கான உடன்பாட்டிற்கு வந்துள்ளது.


இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான இலங்கை ரஸ்யா இணைந்த செயற்குழுவின் கீழ் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது தொடாபான விபரங்கள் அமைச்சரவையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

இலங்கையின் சார்பில் ரஸ்ய அதிகாரிகளை சந்தித்த இலங்கை அதிகாரிகள் இலங்கையின் முப்படையினருக்கும் ரஸ்யா பயிற்சிகளை வழங்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

ரஸ்யாவில் உள்ள இராணுவ பயிற்சி கல்லூரிகளில் இந்த பயிற்சிகள் வழங்கப்படும் இதனைதவிர இலங்கையில் கூட்டு பயிற்சியை முன்னெடுப்பதற்காக ரஸ்ய அதிகாரிகள் இலங்கைக்கு விசேட விஜயங்களை மேற்கொள்வார்கள்

இலங்கை தற்போது அமெரிக்கா இந்தியா பிரிட்டன் சீனா பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பல்வேறு பட்ட பாதுகாப்பு உறவுகளை கொண்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் பல மடங்காக அதிகரித்துள்ளன.

அமெரிக்க படைதரப்பினர் இலங்கைக்கு தொடர்ச்சியாக வந்து செல்வதுடன் அமெரிக்க கடற்படை கலங்களும் இலங்கைக்கு வருகின்றன.

மேலும் மனிதாபிமான நெருக்கடிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இரு நாடுகளின் படையினரும் கூட்டு ஒத்திகைகளிலும் ஈடுபடுகின்றனர்.

இதேவேளை இந்தியா தனது இராணுவபயிற்சி கல்லூhரிகளில் இலங்கை படையினருக்கு இடமளித்து வருகின்றது.