Aug 13

புனித ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு

புனித துல் ஹஜ் மாதத்திற்கான புனித தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இம்மாதம் 22 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.


கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழு பிரதித் தலைவரின் தலைமையில் நேற்று தலைப்பிறை பார்க்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் தலைப்பிறை தென்பட்டமையினால் இம்மாதம் 22 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாளை கொண்டாடலாம் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,