Jun 04

கனடா செல்லும் இலங்கையின் பிரபலம்

இலங்கையின் பிரபல திரைப்பட நடிகை காயத்ரி டயஸ் கனடா செல்லவுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காயத்ரி டயஸின்,இரண்டு மகள்களின் கல்வி நிலை கருதியே அவர் கனடா செல்ல திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,நடிகை மற்றும் அவரின் இரண்டு மகள்களுடன், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கனடா செல்லவுள்ளளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அழகு கலை நிபுனராகவும் செயற்படும் காயத்ரி டயஸ்,கனடா சென்று சொந்த தொழில் ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.