Aug 13

சென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி

அமெரிக்காவில் சர்கா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு, அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்று முதல் இன்று வரை பொதுமக்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் விஜய்,  நேராக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.