Mar 14

11,000 தன்னார்வத் தொண்டர்களை கௌரவிக்கும் ஒன்ராரியோ மாகாண அரசு

ஒன்ராரியோ மாகாண அரசு 11,000 தன்னார்வத் தொண்டர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளை நடாத்த ஆயத்தமாகின்றது. இத்தன்னார்வத் தொண்டக்கள் 55 விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தப்பட உள்ளனர்.

இவ்வருடம் மார்ச் மாதம் தொடக்கம் ஜுன் மாதம் வரை மாகாணமெங்கும் 40 இடங்களில் நடாத்தப்பட உள்ள நிகழ்வுகளில் இவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஒன்ராரியோ மாகாணக் குடிவரவு அமைச்சர் லாரா அல்பனீஸ் அவர்கள், ஒன்ராரியோவின் தன்னார்வத் தொண்டர்களின் ஆதரவு இன்றியமையாததொன்றாகும் எனக் கூறினார். தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்பு பலவிதங்களில் ஒன்ராரியோ மாகாணத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.