Jun 04

லண்டன் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு நியூசிலாந்து – ரஷ்யா இரங்கல்

லண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு நியூசிலாந்து மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் வருடாந்த ஷங்கரி – லா உரையாடலில் பங்கேற்று உரையாற்றியபோது இவர்கள் தங்களது இரங்கல் செய்தியினை வெளியிட்டனர்.

இதன்போது, ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமின் கூறுகையில், “முதலில், மஞ்செஸ்டரில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுதாக்குதல் மற்றும் நேற்று நடைபெற்ற தாக்குதல்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்த விரும்புகிறேன்” என கூறினார்.

நியூசிலாந்து பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், “தீவிரவாத அமைப்புகள் தங்களது ஆதரவினை வளர்த்துக்கொள்ள இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை அணுகின்றமை நாம் அறிந்ததே. இதுவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது. இதுபோன்ற ஒரு கொடூரமான தாக்குதல்களை இன்று நாம் லண்டனில் பார்க்கின்றோம்.

இதற்காக பிரித்தானியாவில் உள்ள எங்களது சொந்தங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்” என கூறினார்.