Aug 11

பேராதனை பல்கலைக்கழக பீடங்களை திறக்க தீர்மானம்

கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் தவிர்ந்த, அனைத்து பீடங்களும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களின் 80 வீத வருகை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், அதற்கு மாணவர்கள் அமைதியின்றி செயற்பட்டதை அடுத்து, கடந்த ஜூலை 17ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மூடப்பட்டது.

அதனை தொடர்ந்து பொறியியல் பீட மாணவர்களை பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் வெளியேறாத நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நிமித்தம் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும், இரு மாதங்களுக்கு மூடுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த ஜூலை 27ஆம் திகதி அறிவித்தது.

இந்த அறிவிப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பொறியியல் பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.