Aug 11

ஜேர்மனியில் அதிகரித்த வெப்பநிலை: பழவியாபாரிகள் மகிழ்ச்சி

ஜேர்மனியின் 30 பாகை செல்சியசில் காணப்படும் அதிகரித்த வெப்பநிலையானது குளவிகள் இனப்பெருக்கத்திற்கு சாதகமாகவுள்ளதாகவும் அதேவேளை அதிகரித்த வெப்பநிலையினால் பழவியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் NABU பசுமைக்குழு தெரிவித்துள்ளது.

குளவிகளின் இனப்பெருக்கத்திற்கு வெப்பமான மற்றும் உலர்ந்த காலநிலை உகந்ததாக இருப்பதனால் இவ்வருடம் மிகச்சிறந்த காலப்பகுதியாக அமைந்துள்ளமையினால் வெளியிடங்களில் காணப்படும் உணவுப்பொருட்களை அவை அணுகாதவாறு பாதுகாக்குமாறும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலை தமக்கு மகிழ்ச்சியினைத் தருவதாகவும் அது தமது அறுவடைக்கு இது மிகவும் உதவியாக இருப்பதாகவும் பவேரியாவின் பழ உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களில் ஏற்படவுள்ள புயல்காற்றினால் வெப்பநிலை அதிகரிப்பு நீங்கிவிடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.