Aug 11

யாழில் சோகம்! 15 வயது மாணவனிற்கு ஏற்பட்ட பரிதாபம்! மாணவன் நீரில் மூழ்கி பலி

யாழ்ப்பாணம் , காரைநகர் கடற்பிரதேசத்தில் பாடசாலை மாணவரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று மாலை மேலும் சில மாணவர்களுடன் இணைந்து கடலில் நீராட குறித்த மாணவர் சென்றுள்ள நிலையிலுயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவருடன் நீராட சென்ற மேலும் சில மாணவர்கள் ஊர்காவற்துறை காவற்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.