Aug 11

தாய்லாந்தில் அமைகிறது பிரமாண்ட ராமர் கோவில்

ராமஜென்ம பூமி அமைப்பின் சார்பில், தாய்லாந்து நாட்டில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி துவங்கியது.

இது குறித்து, ராமஜென்ம பூமி அமைப்பினர் கூறியதாவது: உ.பி., மாநிலம் அயோத்தியில், மிக விரைவில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும். ராமஜென்ம பூமி குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால், கோவில் கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், இதற்கு விரைவில் தீர்வு காணப்படும்.

தென்கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேசியாவின், அயுத்தயா என்ற இடத்தில், பிரமாண்ட ராமர் கோவில் கட்ட திட்டமிட்டுளோம். இதற்கான பூமி பூஜை வெற்றி கரமாக நடந்துள்ளது.

வெளிநாடுகளை சேர்ந்தோர், ஹிந்து மத கடவுளான, ராமர் பற்றி தெரிந்துகொள்ள, இந்த கோவில் பெரும் உதவிகரமாக அமையும். மிக பிரமாண்ட முறையில் கட்டட்பட உள்ள இந்த கோவில் போன்றே, அயோத்தியிலும், விரைவில் ராமர் கோவில் கட்டப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.