Aug 11

டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரன் அவசர பேச்சு – ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பற்றி தீவிர அலசல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரன் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு வர்த்தகம், ஈரான் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான நெருக்கடிகள் தொடர்பாக நேற்று வௌ்ளிக்கிழமை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக, டுவிட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “எம்மானுவெல் மெக்ரனுடன் சாத்திப்பாடான தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவர் கருத்துக்களை பறிமாறிக் கொண்டார். குறிப்பாக பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டது” என்று கூறியுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களும் “விரிவான வர்த்தக செயற்பாடுகள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு காரணிகள் தொடர்பாகவும், ஈரானின் தற்போதைய நிலைமை மற்றும் மத்திய நாடுகளுக்கிடையிலான எல்லை நெருக்கடிகள் தொடர்பாகவும் கருத்துக்களை பறிமாற்றிக் கொண்டதாக” வௌ்ளை மாளிகை வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பிரான்சின் உத்தியோகபூர்வ அரச மாளிகையான எலிஸீ மாளிகை வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இரண்டு தலைவர்களும் சிரியா, ஈரான் மற்றும் இஸ்ரேல்- பாலஸ்தீன முறுகல் நிலை தொடர்பாகவே கலந்துரையாடியதாகவும், வர்த்தக செயற்பாடுகள் தொடர்பாக எந்தவிடயமும் சுட்டிக்காட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் மற்றும் மெக்ரன் ஆகியோர் இறுதியாக கடந்த ஜூலை மாதம் பிரசல்ஸ்ஸில் இடம்பெற்ற நேட்டோ மாநாட்டிலேயே சந்தித்துக் கொண்டனர்.