Aug 11

வெளிநாடுகளில் இருந்து வருவோரால் ;ஆபத்து!!!இலங்கையர்களுக்கு !!

இந்த வருடம் இதுவரையிலான காலப்பகுதியில், மலேரியா தொற்று காரணமாக இதுவரை 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அதில் நான்கு பேர் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று மலேரியா தொற்று நோய் தடுப்பு பிரிவின் கொழும்பு பிரதான அலுவலகத்தின் வைத்திய அதிகாரி மனோநாத் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்திலேயே மலேரியா தொற்று காரணமாக அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேரியா தொற்று நோய் இலங்கையில் உருவாகவில்லை.

வெளிநாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து மலேரியா தொற்று நோயை இலங்கைக்கு கொண்டு வருகின்றார்கள்.

கூடதலாக மலேரியா தொற்று நோய் இந்தியா மற்றும் மடகஸ்கார் ஆகிய நாடுகளிலிருந்தே இலங்கைக்கு காவப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.