Aug 10

வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக அனுர அபய விக்கிரம பதவியேற்பு..!!


வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதிய வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக அனுர அபய விக்கிரம பதவியேற்றார்.


குறித்த பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம் (10.08.2018) காலை 8.30 மணியளவில் கண்டி வீதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.


பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையுடன் ஆரம்பமான இந் நிகழ்வின் பின்னர் சமயத்தலைவர்களின் ஆசியுடன் சுபநேரத்தில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கையோப்பமிட்டு பதவியினை ஏற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் கணக்காளர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா மாவட்ட ஏனைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.