Aug 10

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு இளைஞன்..


மட்டக்களப்பை சேர்ந்த    இளைஞர் ஒருவர் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,கல்லடியை சேர்ந்த மாணிக்கவாசகம் விஜயரூபன்(34வயது) என்பவரே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலும்பில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் கடமையாற்றும் இவர் தனியார் இணைய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும்,அறிவிப்பாளராகவும் கடமையாற்றுவதுடன் பல்வேறு துறைசார் கலைஞனாகவும் அண்மைக்காலமாக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் தனது பணிக்காக அலுவலகம் செல்ல தயாராகிக்கொண்டு இருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரனமாக உயிரிழந்த நிலையில் நேற்று இலவு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.