Aug 10

காட்டுத்தீயின் எதிரொலி: தீ பாசறை களியாட்டத்தில் ஈடுபட்டோருக்கு அபராதம்

கனடாவின் மேற்கத்தேய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் சட்டவிரோத தீ பாசறை களியாட்ட நிகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு அதிகாரம் அபராதம் விதித்துள்ளனர்.

அதன்படி, கடந்த வார இறுதி நாட்களில் மாத்திரம் 48 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் அபராதத் தொகை பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 460இற்கும் மேற்பட்ட காட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்ற நிலையில், களியாட்ட நிகழ்வுகளில் ஈடுபடும் மக்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் தாம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்காக மாகாண அரசினால் பல மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டு வருகின்ற நிலையில், பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் வருத்தமளிப்பதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தீ பாசறை களியாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக இந்நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவருக்கு ஆயிரத்து 150 அமெரிக்க டொலர் அபராதமாக விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கமைய 48 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.