Aug 10

சாம்சங் கேலக்ஸி நோட் 9 அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, பெசல்-லெஸ் ஸ்கிரீன், நோட் 8 போன்றே காட்சியளிக்கிறது. 

புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்9 சீரிஸ் போன்றே 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.5, f/2.4 அப்ரேச்சர், 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐரிஸ் சென்சார், கைரேகை சென்சார் இம்முறை கேமராவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, பிக்ஸ்பி அசிஸ்டண்ட் சேவை மற்றும் இதனை இயக்க பிரத்யேக ஹார்டுவேர் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், லாவென்டர் பர்ப்பிள், மெட்டாலிக் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த நிறங்களுக்கு ஏற்ற நிறத்தில் எஸ் பென், ஓசன் புளு ம்ற்றும் எல்லோ எஸ் பென் வழங்கப்படுகிறது.

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி வெர்ஷன் விலை 999.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.68,750) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி ரேம் மாடல் 1249.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.85,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி நோட் 9 விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்குகிறது.