Aug 10

ஸ்ரீ லங்காவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஸ்ரீ லங்காவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அரசாங்கம் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை விடுத்துள்ளது.


இந்த தகவலை அரசாங்கம் சார்பாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ளார். வட் வரி திருத்த விவாதத்தில் உரையாற்றியபோதே அமைச்சர இந்த தகவலை வெளியிட்டார்.

இதன்படி எந்தவொரு வெளிநாட்டவரும் இலங்கையில் பெற்றுக் கொள்ளும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சலுகை முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உள் நாட்டினுள் பெறப்படும் இந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக அறிவிடப்பட்டுவந்த வட் வரியை மீண்டும் அவர்களிடமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம் 2018 வரவு செலவுத் திட்டத்திற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடுத்த மாதத்தில் இருந்து அமுலுக்கு வரும் என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அமைச்சர்,

”இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் 15% வற் வரி அறவிடப்படுகின்றது. இந்த வரியை மீண்டும் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வட் வரியை மீட்கும் முறை ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது. 2008ஆம் ஆண்டு வரையில் சுற்றுலா பயணிகளின் வருகை 2.1 மில்லியன் வரை அதிகரித்துள்ளமையினால் 4000 மில்லியன் அமெரிக்க டொலர் வரை வருமானம் கிடைத்துள்ளது.

இந்த நிலையை மேலும் அதிகரித்து 2020ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 4 மில்லியன் வரை அதிகரிப்பதற்கு சுற்றுலா அமைச்சினால் வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் இலங்கைக்கு 7000 மில்லியன் வருமானம் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.” என்றார்.