Mar 14

சுன்னாகம் பொலிஸ் அதிகாரி மீதான வழக்கு: 7 பேர் விடுவிப்பு

சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியாகவிருந்த சிந்திக்க பண்டார உள்ளிட்டவர்கள் மீதான விசாரணைக் கைதி கொலைக் குற்றச் சாட்டுத் தொடர்பான வழக்குல் நேற்றைய தினம் 4 சாட்சிகளிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டதோடு 7 சாட்சிகள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

சுன்னாகம் பொலிசாரினால் 2011-11-25ல் கைது செய்யப்பட்ட சி.சுமன் என்பவரை விசாரணையின்போது சித்திரவதை செய்து கொலை செய்த்தாக குற்றம் சாட்டப்பட்டு அப்போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவிருந்த பரிசோதகர் சிந்திக்க பண்டார உட்பட 8 பொலிசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த்து. இதில் 7ம் எதிரி தவிர்ந்த ஏழுபேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்படாத 7ம் எதிரி தொடர்பினில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு தலைமறைவாகவுள்ள 7ம் எதிரி சார்பிலும் சட்டத்தரணி ஆயராகி வழக்கு விசாரணைகளின்போது வாதாடி வருகின்றார். இவ்வாறு இடம்பெறும் வழக்கில் கடந்த 21 ம் திகதி இடம்பெற்ற சாட்சிப்பதிவுகளின்போது 4 சாட்சிகளின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினமும் 4 சாட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதில் 9வது சாட்சியான சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய உப பரிசோதகர் பிரதீப் நிசாந்தகுமார சாட்சியம் அளிக்கையில்  சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் 2011-02-11 முதல் 2013-01-08 வரையான காலம் வரையால. பணியாற்றியதாகவும் இதன் பிரகாரம் குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் விடுமுறையில் நின்றபோதும் காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் தொலைபேசி அழைப்பின்பேரில் பணிக்குத் திரும்பி கைது செய்து வைத்திருந்து இறந்தவர் தொடர்பான வழக்குடன் தொடர்பு பட்டதான பதிவுப் புத்தகங்களை அனுப்பி வைத்தேன்.

அதன் பிரகாரம் 2011-11-25 அன்று இரவு 10.30 அளவில் சிறிஸ்கந்தராயா- சுமனை கைது செய்து 11.50ற்கு பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தினர். இவை பதிவுப் புத்தகத்தினில் பதியப்பட்டுள்ளது. அதனை பரிசோதகர் இந்திக்க பண்டாராவே பதிவு செய்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சுமன் மறு நாள் காலை 6.50ற்கு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டார். அதன் பிரகாரம் மேலும் 4பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றினில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்ககயில் 4 பேரின் விபரம் மட்டுமே இருந்த்து. சுமனின் பெயர் இருக்கவில்லை. சுமனை கைது செய்ய சென்றது பரிசோதகர் சிந்திக பண்டார  , ஞானலிங்கம் மயூரன் , சஞ்சீவ ராயபக்ச , ஜெயந்த , வீரசிங்க பிறேமச்சந்திர , விஜயரட்ணம் கோபிகிருஸ்ணன் ஆகிய பொலிஸ் உத்ரியோகத்தர்கள் ஆகும். எனக் கூறி எதிராக கூண்டில் உள்ளவர்களை அடையாளம் காட்டினார்.

இதன் பிரகாரம் 1 சிந்திக்க பண்டாரா , 2 மயூரன் , 4 சஞ்சீவ ராயபக்ச , 5 ஜெயந்த , 6 பிறேமச்சந்திர என அடையாளம் காட்டியதோடு விஜயரட்ணம் போபிகிருஸ்ணன் கூண்டில் இல்லை என்றார்.

இதேவேளை சாட்சியிடம் மேற்கொண்ட குறுக்கு விசாரணையின்போது மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்த பீ அறிக்கையான பீ 460/11 இல் சுமனின் பெயர் ஏன்உட்படுத்தவில்லை எனத் தெரியுமா ? எனக்கோரியபோது தெரியாது 2011-11-25ம் திகதி இரவு 10.45ற்கு வாக்குமூலம் அளித்து தமிழில் ஒப்பமிட்டுள்ளார். எனப்பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து சாட்சி இலக்கம் 12 சாட்சியம் அளித்தார். இதன்போது 2011-11-25 அன்று கடமையில் இருந்தவேளையிலேயே சுமனைக் கைது செய்து கொண்டுவந்தனர். அதேபோன்று 2011-11-26 காலை கடமைக்கு வரும்போதும் சுமனை கூண்டில் கண்டேன் என்றார்.

இதனையடுத்து 10வது சாட்சியான உப சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் நளின் வீரசிங்க சாட்சியத்தின்போது , நான் 2011-11-25 காலை 6மணிமுதல் மாலை 6 மணிவரை பணியாற்றினேன். நான் பொறுப்பெடுத்தவேளையில் எந்த சந்தேகநபரும்  தடுப்பில் இல்லாதபோதும் 11.50ற்கு  சிறிஸ்காந்தராஜா- சுமன் என்ற  சந்தேக நபர் பாரப்படுத்தப்பட்டார். மாலை கடமை முடிந்து செல்லும்போது வீரசிங்காவிடம் பொறுப்புக் கொடுத்து கடமையில் இருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் 2011-11-26 காலை 5.50ற்கு கடமையை பொறுப்பேற்கும்போது சுமனை பாரமெடுத்தேன். அவ்வாறு தடுப்பில் இருந்த சுமனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார காலை 6.50ற்கு பொறுப்பெடுத்து அலுவலகம் கூட்டிச் சென்று பின்பு வெளியில் அழைத்துச் சென்றதனைக் கண்டேன்.என்றார்.

இதனைத் தொடர்ந்து 12ம்  சாட்சியான வீரசிங்க  சாட்சியமளிக்கையில் , 2011-11-25 மாலையில் கடமையை பொறுப்பெடுக்கும்போது சுமனையும் பொறுப்பெடுத்து கடமையில் இருந்தவேளையில் இரவு 11.30 மடியளவில் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார விசாரணைக்காக சுமனை வெளியில் எடுத்தார். அவ்வாறு வெளியில் எடுக்கப்பட்ட சுமன் மீண்டும் அதிகாலை  12.30ற்கு என்னிடம் பாரப்படுத்தப்பட்டார்.
 
அவ்வாறு அதிகாலையில்  கையளிக்கப்பட்டவரை பரிசோதித்தேன் முன்பு இருந்த்து போன்றே திரும்பியிருந்தார். என்றார். இதேநேரம் அரச சட்டத்தரணியான பிரதி சொலியிட்டர் ஜெனரல் குறித்த வழக்கின் 31 சாட்சிகளில் சாட்சி இலக்கங்களான 11,13,14,16,17,18,19,20ம் இலக்கங்களை உடைய சாட்சிகள் குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக மன்றில் அறிவித்தார். இதனை மன்று ஏற்றுக்கொண்டது.

குறித்த வழக்கின் சாட்சிப்பதிவுகள் இன்றைய தினமும் இடம்பெறும் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்