Aug 10

எட்டாவது நாளாக தொடரும் முல்லை.மீனவர்களின் போராட்டம்

தடைசெய்யப்பட்ட வலைகளின் பயன்பாட்டை நிறுத்த கோரி, முல்லைத்தீவை சேரந்த மீனவர்கள் எட்டாவது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் கடந்த 2 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை நடத்தியதோடு திணைக்களத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதனால் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புதிய அதிகாரிகள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்  மீனவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்று தருவதாக உறுதியளித்துள்ளனர்.

இந்தவகையில் எதிர்வரும் 12 ஆம் திகதி மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடப்போவதாகவும் அதன்பின்னரே மீனவர்களுக்கு தீர்வை வழங்க முடியுமெனவும் அவ்வதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.