Jun 04

மெட் கடலில் ஒரே நாளில் 173 அகதிகளை மீட்ட ஸ்பெயின் கடற்படை

வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர சென்று கொண்டிருந்த 170-க்கும் மேற்பட்டோரை ஸ்பெயின் கடற்படை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் இருந்து ஐரோப்பா நோக்கி 4 கப்பல்களில் மக்கள் சென்று கொண்டிருந்தனர். மெடிடர்னியன் கடலில் இருந்து அட்லாண்டிக் கடலின் கிளைக் கடலான அல்போரன் கடலுக்கு இடம் பெயர்ந்த போது, ஸ்பெயின் கடற்படை அதிகாரிகள் அந்த கப்பலை பார்த்துள்ளனர். 

இதையடுத்து ஸ்பெயின் - மொராக்கோ நாடுகளுக்கு இடையே இருக்கும் அல்போரன் தீவில் உள்ள கடற்படை தளத்திலிருந்து மீட்புக்குழுவுடன் புறப்பட்டுச் சென்ற ஸ்பெயின் கடற்படை அதிகாரிகள், ஒரே நாளில் மக்கள் 173 பேரை மீட்டு ஸ்பெயினின் அல்மேரியா, மோட்ரில் துறைமுக நகருக்கு அழைத்துச் சென்றனர். அத்துடன் மேலும் 3 கப்பல்களில் மக்கள் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மீட்கப்பட்ட 173 பேரும் ஆப்பிரிக்காவின் சகரான் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சர்வதேச குடிபெயர்பவர்கள் நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்படி கடந்த ஜனவரி 1 முதல் ஏப்ரல் கடைசி வரை 2,426 பேர் ஸ்பெயினுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறியுள்ளது.