24 மணி நேரங்கள் திறக்கப்படவுள்ள பூங்காக்கள்
பிரான்ஸ் தலைநகர் பரிசில் சில பூங்காக்கள் இந்த கோடை காலத்தில் 24 மணிநேரங்கள் திறந்திருக்கும் நிலையில், இந்த பட்டியலில் மேலதிகமாக 13 பூங்காக்கள் சேர்க்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இதனை தெரிவித்துள்ளார்.
The Louis-XIII square, The Grands-Explorateurs garden, The Boucicaut square, The Villemin garden, Truillot Garden, Émile-Cohl Square, Georges-Méliès Square, Parc Montsouris, André-Citroën Park, Sainte-Périne Park, Buttes-Chaumont Park, Séverine Square, Sergent-Aurélie-Salel Square
ஆகிய 13 பூங்காக்கள் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை 24 மணிநேரங்களும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மூடப்படும் பூங்காக்களில், 137 பூங்காக்கள் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.