Jun 04

மத்திய லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி; பலர் காயம்

மத்திய லண்டனில் லண்டன் பிரிட்ஜ் என்ற பிரசித்தி பெற்ற இடத்தில் நேற்றிரவு 10 மணியளவில் நடத்ப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஒன்றில் குறைந்த பட்சம் 7 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளை நிற வாகனம் ஒன்றை ஓட்டிவந்த ஒருவர் வீதியில் பொதுமக்கள் மீது வாகனத்தைச் செலுத்தித் தாக்குதலை நடத்தியிருக்கின்றார். இச்சம்பவத்தை ஒரு பயங்கரவாத தாக்குதல் என பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இச்சம்பவத்தை நடத்தியது யார் என உனடடியாகத் தெரியவரவில்லை. சம்பவம் நடைபெற்ற இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்திவருகின்றார்கள். தாக்குதல் நடத்தியவர் தப்பிச் சென்றுவிட்டாரா என்பதும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.