Jun 03

சம்பியன் தொடர்; தென் ஆபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை

சம்பியன் தொடரின் பி பிரிவுக்கான போட்டியில் தென்ஆபிரிக்க மற்றும் இலங்கை அணிகள் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் மோதியிருந்தன. 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு தென் ஆபிரிக்காவைப் பணித்தது.

நிதானமான மெதுவாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்த தென் ஆபிரிக்க அணி 50ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 299ஓட்டங்களை குவித்தது.

அவ்வணியின் சார்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஹசிம் ஆம்லா 103ஓட்டங்களையும், டு பிளஸிஸ் 75 ஓட்டங்களையும், டுமினி ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

300ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பதிலுக்க துடுப்பெடுத்தாட ஆரம்பித்திருந்த இலங்கை அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டிக்வெல்ல அதிரடியான ஆரம்பத்தை வழங்கியிருந்தார்.

41ஓட்டங்களுடன் அவர் ஆட்டமிழக்கவும் மற்றொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான அணித்தலைவர் உபுல் தரங்க 57ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

மத்திய வரிசை, பின்வரிசை வீரர்களில் குஷால் ஜெனித் பெரேரா மட்டும் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் களத்திலிருக்க ஏனை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் அரங்கு திரும்பிருனர்.

இதனால் இலங்கை அணி41.3ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 203ஓட்டங்களை மட்டுமே பெற்று 96ஓட்டங்களால் தோல்வியைச் சந்தித்தது. 

பந்துவீச்சில் 4விக்கெட்டுக்களை வீழ்த்திய இம்ரான் தாஜிர் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார்.