Aug 08

பிரான்ஸ் ஜனாதிபதி மக்களுக்கு நேரில் சென்று வாழ்த்து

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மனுவேல் மக்ரோன் மற்றும் அவருடைய பாரியார் பிரிஜிட் மக்ரோன் விடுமுறை காலத்தை கொண்டாடிய மக்களுக்கு நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

கோடைவிடுமுறை காலத்தில் மக்களை தரிசிக்க நேரம் ஒதுக்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) சுற்றுலாத்தளமொன்றிற்கு நேரில் சென்றபோதே மக்களுடன் கைகுலுக்கி  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

விடுமுறையை சிறப்பிக்க Bormes-les-Mimosas எனும் இடத்தில் அமைந்துள்ள Brégançon கோட்டைக்கு சென்ற அவர்கள் அங்குள்ள மக்களுடன் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இந்நிலையில் குறித்த கோட்டை அமைந்துள்ள சுற்றுலாத்தலத்தில் மக்ரோன் தமது பாரியாருடன் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.