Aug 08

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த நரேந்திர மோடி சென்னை வருகை!

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றுற்றனர்.

சென்னை ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலைப் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்தியப் பிரதமர் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகம் வந்துள்ள நிலையில், சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.