Aug 08

வேதகிரீஸ்வரர் சிவன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை பிறக்கும்சங்கு

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் உள்ள சங்கு தீர்த்த குளத்தில் சங்கு பிறக்கும் போது என்ன நிகழும்.


திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் சிவன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும் போது குளத்தில் உள்ள அலைகள் அதிகமாவதுடன் – குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.

சங்கு தீர்த்த குளத்தில் உள்ள சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்து வைப்பார்கள். அது சமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்து விட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்று விடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அற்புதமா நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள்.

சாதாரணமாக உப்பு நீரிலும் கடலிலும் தான் சங்கு பிறக்கும். ஆனால் இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இந்த சங்கு தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இது தோன்றும். இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சிவன் கோயிலில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அந்த கோவிலில் சென்று பார்க்கலாம்.