Aug 08

வரலாறுக்கு மரணம் கிடையாது.. கலைஞருக்கு மரணம் இல்லை.. ராதாரவி கண்ணீர் அஞ்சலி

வரலாறுக்கு மரணம்.. அதுபோல் கலைஞருக்கு மரணம் இல்லை என்று ராதாரவி மற்றும் எம்ஆர்ஆர் வாசு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி, ராதாரவியின் தந்தையும் நடிகருமான நடிகவேள் எம்.ஆர்.ராதா மேல் தனி மரியாதை கொண்டிருந்தவர். இவர்களது நட்பு நாடக மேடையிலேயே அரும்பி, திரையுலக வாழ்வில் வளர்ந்து, அரசியல் வாழ்விலும் மணம்வீச தொடங்கியது.

கருணாநிதியின் திறமையை கண்டு வியந்த எம்.ஆர். ராதா, 'தூக்குமேடை' என்ற நாடகத்தின்போது கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். அது இன்று கருணாநிதி மறையும்வரை கலைஞர் என்ற வார்த்தையும் ஒட்டி கொண்டே வரும் என்பதை யாருமே அன்றைய காலத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

எல்லோரும் கருணாநிதி இறந்துவிட்டதாக நினைக்கிறார்கள். கிடையாது. வரலாறுக்கு மரணம் கிடையாது.. அதுபோல் கலைஞருக்கும் மரணம் கிடையாது. அவரது குடும்பத்துக்கு அனுதாபம் என்று என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் அது என் குடும்பம்கூட" என்றார்.