Jun 03

கனேடிய எல்லைக்குள் முயற்சித்த வேளை உயிரிழந்த கானா நாட்டு பெண்ணுக்கு ஹூசேன் இரங்கல்

அமெரிக்க-கனேடிய எல்லையைக் கடந்து கனடாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த வேளை உயிரிழந்த கானா நாட்டு பெண்ணுக்கு கனேடியக் குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூசேன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நாடாளுமன்றில் கூறுகையில், ‘இறந்தவரது குடும்பங்கத்தவர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்’ என கூறினார்.

கடந்த வாரம் அமெரிக்க-கனேடிய எல்லையைச் சட்டவிரோதமாகக் கடந்து கனடாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த போது இவர் கடும்குளிரின் தாக்கத்தினால் உயிரிழந்தார். மனிட்டோபா மாகாணத்தின் எல்லைக் கிராமமான எமர்சன் என்ற இடத்திற்கருகில் இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் வசித்துவந்த 57 வயதான குறித்த பெண், ரொன்ரோவில் உள்ள தனது மகளுடன் வாழும் எண்ணத்தில் இருந்ததாக இவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.