Aug 07

நடவடிக்கை ;தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்துக்கு

தோட்ட தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஊவா மாகாணசபையின் உறுப்பினருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். 

இலங்கை தொழிலாளர் காங்ரஸ், முதலாளிமார் சம்மேளனம் இலங்கை தொழிலாளர் ஒன்றியம் மற்றும் ஜப்பானிய நிறுவனமான ஜிலாப் நிறுவனம் ஆகியன இணைந்து முறைசாரா தொழிலாளர்களினை ஊக்குவிக்கு வகையிலான அடிப்படை அபிவிருத்தி ஏற்படுத்தும் வகையிலான வேலைத்திட்டத்தினை அறிமுகப்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்காக பூர்வாங்கள் நடவடிக்கைகளை தொழிலாளர் காங்கிரஸ் முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.