பூகம்பம் பாதித்த பகுதிகளில் உயிருடன் இருவர் மீட்பு
இந்தோனேசியாவில் இரண்டு நாட்களிற்கு முன்னர் பூகம்பம் தாக்கிய லொம்பொக் தீவுகளில் இடிபாடுகளிற்கு இடையிலிருந்து பொதுமக்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
லடிங் லடிங் என்ற கிராமத்தில் மசூதியொன்றிற்குளிலிருந்து ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை நிகழ்ந்த பூகம்பம்காரணமாக தரைமட்டமான மசூதிக்குள்ளிலிருந்தே அவர் மீட்கப்பட்டுள்ளார்.
மசூதியின் இடிபாடுகளில் இருந்து நபர் ஒருவர் வெளியே கொண்டுவரப்படுவதையும் அந்த நபரிற்கு மீட்பு பணியாளர்கள் ஆறுதல் தெரிவிப்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பி;ட்ட மசூதிக்குள்ளிலிருந்து மேலும் பலரை மீட்கலாம் என மீட்புகுழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இருவரை உயிருடன் மீட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மசூதிபகுதியில் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை மின்சார விநியோகம் பாதிப்பு பாலங்கள் சாலைகள் சேதமடைந்துள்ளமை போன்றவற்றினால் மீட்பு பணிகள் ஆரம்பத்தில் பாதிப்பை எதிர்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
பூகம்பம் பாதித்த பகுதியில் இந்தோனேசிய அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.