Aug 07

காங்.,கிடம் மக்கள் எதிர்பார்ப்பு: ராகுல்

மோடி அரசை காங்கிரஸ் மாற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக, அக்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்

டில்லியில் காங்கிரஸ் பார்லிமென்ட் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசுக்கு எதிராக மக்களின் கோபம் அதிகரித்துள்ளது. மோடி அரசை மாற்றிவிட்டு, தங்களின் குறைகளை கேட்கும் அரசை அமைக்க காங்கிரஸ் உதவ வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த அரசானது, வறுமை, வேலைவாய்ப்பின்மை, சமநிலையற்ற தன்மை ஆகியவற்றிற்கு தீர்வு காணும் அரசாக இருக்க வேண்டும் எனவும் மக்கள் விரும்புகின்றனர். 

சர்வாதிகாரத்திற்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கான கடமை நம்முன் உள்ளது. வெறுப்புணர்வு, பிரிவினைவாதம் மற்றும் வன்முறை சக்திகள் ஆகியவை தோற்கடிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். மோடி ஆட்சியின் கீழ் ஊழல், பொருளாதார வீழ்ச்சி, சமூகத்தில் பிரிவினைவாதம் ஆகியவை அதிகரித்துள்ள நிலையில், இங்கு நாம் கூடியுள்ளோம். இவ்வாறு ராகுல் பேசினார்.