Aug 07

பரிஸில் தீ விபத்து: தீயணைப்பு படைவீரர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரரொருவர் காயமடைந்துள்ளார்.

பரிஸின் நன்டரே பகுதியில் நேற்றிரவு பரவிய இத்தீயானது, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரை நீடித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தீயை அணைக்க முற்பட்டபோது தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியாக காரணம் கண்டறியப்படாத போதிலும் தீ ஏற்பட்ட பகுதியில், கட்டட வேலைக்கான பொருட்களின் களஞ்சியசாலையொன்று அமைந்திருப்பதினால் அப்பொருட்களின் வெடிப்பினால் தீப்பற்றியிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.