Aug 07

ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிட மாட்டார் !!!

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிட மாட்டார் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.


அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபர்ட் ஹில்டன், மற்றும் டேவிட் மெக்கின்னன், ஜோரென் ரோட் மற்றும் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மைக்காலமாக ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த தரப்பில் இருந்து யார் போட்டியிடப் போகின்றார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், கோட்டபாய அல்லது பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இத தகவல் வெளியாகியுள்ளது.